அம்மா இறந்துட்டாங்க..! இறுதிச்சடங்கு கூட பண்ண முடியல..! சடலத்தை வீடியோ காலில் பார்த்து கதறிய ராணுவ வீரன்!

தாயார் இறந்த நிலையில் அவருடைய உடலை ராணுவ வீரர் வீடியோவில் பார்த்த சம்பவமானது மேட்டூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேட்டூருக்கு அருகே மேச்சேரி எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் பிறந்தார். பின்னர் ராணுவத்திற்கு படித்து தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மேட்டூரில் சக்திவேலின் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சக்திவேலின் தாயாரின் பெயர் மாது. இவர் கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலையில் மாது உயிரிழந்தார். உடனடியாக தாய் இறந்த செய்தியை அவருடைய தந்தை கால் செய்து சக்திவேலிடம் தெரிவித்தார். தன் தாய் இறந்த செய்தியை கேட்டவுடன் சக்திவேல் அதிர்ந்து போனார். வீடியோ காலில் தன்னுடைய தாயாரின் உடலை பார்த்த சக்திவேல் கதறி அழுத காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தற்போது கொரோனா வைரஸ்காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், தன்னால் ராஜஸ்தானிலிருந்து மேட்டூருக்கு வர இயலாது என்று சக்திவேல் கூறியுள்ளார். மேலும், தாயாரின் இறுதி சடங்குகள் முடிந்தவுடன் அவரை அடக்கம் செய்து விடுமாறும் தன் தந்தையிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது மேச்சேரியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.