இரவுப் பணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த ராணுவ வீரர்..! அப்போது அவர் மனைவி கூறிய அந்த வார்த்தை! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

இரவு பணிக்கு புறப்பட்ட ராணுவ வீரர் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் முகேஷ் மன்ஹர் என்ற ராணுவ வீரர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பபிதா. இவர் உள்ளூரிலேயே பணியாற்றி வந்துள்ளார். அவ்வப்போது தன்னுடைய  குடும்பத்தாருக்கு வேண்டிய பணத்தை அனுப்பி  கவனித்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கணவர் அவருடைய குடும்பத்திற்கு உதவுவதை எதிர்த்த பபிதா அவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடக்கத்திலிருந்தே முகேஷ் அவருடைய குடும்பத்திற்கு உதவுவதை பபிதா எதிர்த்து வந்துள்ளார். மேலும் முகேஷ்  அவர்களுடன் உறவாடுவதையும் பபிதா ரசிக்கவில்லை.

2 நாட்களுக்கு முன் இரவு நேரப் பணிக்கு செல்ல முகேஷ் தயாரான நிலையில், அவருடைய சகோதரர் செல்போனில் அழைப்பு விடுத்து திருமணம் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தன்னுடைய மனைவியிடம் முகேஷ் தெரிவித்தார். அதற்கு பபிதா திருமணத்திற்கு செல்ல கூடாது என்று முகேஷை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இவர்களுடைய வாக்குவாதத்தை கேட்ட பக்கத்து வீட்டுப்பெண் விரைந்து வந்தார். அப்போது ஆத்திரம் அடைந்த முகேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மனைவி பபிதாவை சுட்டு கொன்றார். பிறகு அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை பார்த்த பக்கத்து வீட்டு பெண் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.