நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் .
பிரபல நடிகரின் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகும் சூர்யா! எப்படி தெரியுமா?

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஆனது ஏப்ரல் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த வெற்றிப் படமான இறுதிசுற்று படத்தை இயக்கியவர் ஆவார் .
சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனனின் இரட்டை குழந்தைகள் இலன் மற்றும் இயல் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . நடிகர் அர்ஜுனன் இதற்கு முன்பாக டிக் டிக் டிக் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போன்ற வெற்றி படங்களில் காமெடியனாக நடித்தவர் ஆவார் .
கடைசியாக வெளிவந்த சூர்யாவின் என் ஜி கே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது . காப்பான் படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, வெற்றிப்பட இயக்குனரான சுதா கொங்கரா வுடன் இணைந்துள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.