மேலாடை இல்லாமல் 33 வயது நடிகர் வெளியிட்ட போட்டோ! 45 வயது நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் சட்டை அணியாமல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது .


இவர் நடித்து வரும் பானிபட் படத்திற்காக கடந்த பல மாதங்களாக ஜிம்மிற்கு சென்று தனது உடலை போர் வீரர் போல் இவர் மாற்றியுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும் தங்களது கருத்துக்களை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டு வருகின்றனர். 

அர்ஜுன் கபூர் வெளியிட்ட இந்த புகைப்படத்தை கண்டு பாலிவுட் நடிகை மல்லிகா அரோரா பைசெப்ஸ் எமோஜிகளை கமெண்டில் பதிவு செய்துள்ளார் . மேலும் பாலிவுட் புகழ் அணில் கபூர் , ரோஹித் ஷெட்டி, வாணி கபூர் ஆகியோரும் அர்ஜுன் கபூர் வெளியிட்ட புகைப்படத்தை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர். 

முன்னதாக  அர்ஜுன் கபூர் மற்றும் மல்லிகா அரோரா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன . சமீபத்தில் அர்ஜுன் கபூர் என்னுடைய இதயம் மல்லிகா அரோராவிடம் உள்ளது என தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார்.

அந்த போட்டோவில் மல்லிகா அரோரா முகம் மறைக்கப்பட்டு அவர் ஒரு இதயம் வடிவிலான பேக் ஒன்றை கையில் வைத்திருப்பது போல புகைப்படத்தை அர்ஜுன் கபூர் வெளியிட்டிருந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.