மகள் வயது பெண்ணை அம்மாவாக்கிய பிரபல நடிகர்! கல்யாணம் செய்யாமலேயே கசமுசா!

பாலிவுட்டின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அர்ஜுன் பால் மீண்டும் மூன்றாவது முறையாக அப்பாவாக போகிறார். இந்த தகவலை மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.


அர்ஜுன் ராம்பால் மூன்றாவது முறையாக அப்பாவாக போகிறார். இந்த குழந்தை இவருக்கும் இவரது காதலி கேப்ரியெல்லாவிற்கும்  பிறக்க உள்ளது. இதில் கொடுமை என்ன என்றால் கேப்ரியல்லா அர்ஜூனுக்கு மகள் வயது உடையவர். வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் ராம்பால், கேப்ரியெல்லா  உடன் பழகுவதற்கு முன்பு மெஹர் ஜெஸ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

கடந்த 2018 -ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 25- ஆம் தேதி இந்த தம்பதியினர் சட்டபூர்வமாக பிரிய போவதாக கூறினார்.  இவர்கள்  இருவருக்கும் மெஹர் மற்றும் மாணிக்கா  என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் மெஹர்கிற்கு 17 வயதும், மாணிக்கவிற்கு 13 வயதும் ஆகிறது.  சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ஜுன், "கடந்த 5 ஆண்டுகள் என் வாழ்க்கையின் நரக நாட்கள் என்று மிகுந்த வருத்ததுடன் கூறினார்".

இதுவே முதற்முறை தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளி உலகிற்கு அர்ஜுன் ராம்பால் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அர்ஜுன் தனக்கும் கேப்ரியெல்ளுக்கும் இடையில் இருந்த உறவை பற்றி வெளி உலகிற்கு கூறாமல் இருந்தார்.  பின்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களின் உறவை பற்றி வெளிப்படையாக பதிவு இட்டார்.  

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அர்ஜுனிற்கும் கேப்ரியெல்ளுக்கும் இடையில் சந்திப்பு ஏற்பட்டது.  இது கடந்த ஆண்டு முதல் தான் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இருவரும் தற்போது பெற்றோராக மாற போகின்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு அர்ஜுனும் அவரது காதலியும் மாலதீவில் உல்லாசமாக நாட்களை கழித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.