இனிப்பான உணவு மட்டும் சாப்பிடுபவரா நீங்கள்?? என்ன பிரச்னை வரும் தெரியுமா?

உணவு சமைக்கும் ஒவ்வொரு நபருக்கும் சுவைகளின் தன்மையைப் பற்றியும், அந்த சுவை எதில் இருந்து கிடைக்கிறது, அதன் நன்மை தீமைகள் என்ன என்பதுபோன்ற தகவல்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து சுவையும் உணவில் கலந்திருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் பலரும் இனிப்பு சுவையை அதிகம்விரும்புகிறார்கள். அதனாலே அதிக நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.


இனிப்பு சுவை மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடியாக சட்டென உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரக்கூடியது.  குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. அதனால்தான் குழந்தைகள் இனிப்பு சுவையை அதிகம் விரும்புகிறார்கள்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப இனிப்பு சுவை சில நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழிவு நோய்க்கு இனிப்பும் ஒரு காரணமாகும்.

இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் பருமன் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.  பழங்கள், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் இனிப்புச் சுவை அதிகம் அடங்கியுள்ளது. அதனால் இந்த உணவுகளை தினமும் ஒரு நேரம் மட்டுமே எடுத்துக்கொள்வது போதுமானது.