இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா? ஏன் செய்ய்யப்பட்டன?
ராஜராஜன் காலத்தில் யார் யார் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன? ரஞ்சித்துக்கு நெத்தியடி பதில்!

இராஜராஜன் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா ?
ஆம். செய்யப்பட்டன. அதற்கான காரணங்களும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடமிருந்து மட்டும் நிலங்கள், அரசால் கையகப்படுத்தப் பட்டனவா ?
இல்லை. எல்லா இனத்தவரிடமிருந்தும் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
எப்போது கையகப்படுத்தப்பட்டன என்ற விவரங்கள் உள்ளனவா ?
உண்டு. கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
எதற்காக பறிமுதல் செய்யப்பட்டன ?
1. பிறன் மனை கவரும் துரோகிகள்,
2. கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்து, தன்னுடைமை ஆக்கிக்கொண்டார்.
3. அரசருக்கோ, அரச குடும்பத்தினருக்கோ, அரசுக்கோ, கடும் தீங்கு செய்து, இராஜத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
மேற்கூறப்பட்ட குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டவர்களின், நிலங்கள், சொத்துகள், உடைமைகள், அரசால் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் பொருளானது, கோவில் கணக்கிலோ, ஊர்ச்சபை நிர்வாகக் கணக்கிலோ, வரவு வைக்கப்பட்டுள்ளது.
இராஜராஜர் எம் நிலத்தைப் பறித்துக்கொண்டார் என ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின், எவராவது அவர்மேல் குற்றம் சுமத்துகிறார் எனில், அவர் யாராயிருக்கக் கூடும் ?
பதில், உங்கள் விருப்பத்திற்குறியது.