இந்தியாவை விட்டு பிராமணர்கள் எல்லோரும் வெளியேறப் போறாங்களாம்! காரணம் தி.மு.க.தானாம்!

பிராமணர்கள் இல்லாத நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்று வேதனையுடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார், சுரேஷ் பத்ரி நாராயணன். அவரது பதிவு இது.


இடஒதுக்கீடு பிரச்சனையால் கல்வி வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டு பல ப்ராமண வீட்டு ஆண்கள் பெண்கள் கல்யாணம் ஆகாமல் அநாதை ஆகியுள்ளனர். இடஒதுக்கீடு பிரச்சனையால் கல்வி வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டதால் வசதி படைத்தவர்கள் வெளிநாட்டிற்கு சென்று குடியேறிவருகின்றனர்.

இங்குள்ள ஏழைகள் கல்வி வேலைவாய்ப்பு உரிமை மறுக்கப்பட்டதால் திருமணம் ஆகாமல் சந்ததி வளராமல் இங்குள்ள ப்ராமண சந்ததிகள் அழியப்போகிறது. அநேகமாக 2040 _-2050 ற்குள் ப்ராமணர்கள் இந்தியாவில் இல்லாத நிலை ஏற்படும். சந்தோஷபட்டுக் கொள்ளுங்கள் தி.க., தி.மு.க., காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியினரே ப்ராமணர்களை அழித்ததற்காக.

ஆனால் கடவுளை நம்புகிற ப்ராமணனை கடவுள் காப்பாற்றுவான் என்று இத்துனை காத்திருந்த ப்ராமணன் இனியும் காத்திருந்து அழிந்து போவான். ப்ராமணின் அழிவில் அழித்தவர்களை ப்ராமணர்களை சட்டத்தின் மூலம் அழிக்க உதவியை நாட்டை கடவுள் பார்த்துகொள்வான்.     

வெளிநாட்டில் வாழும் ப்ராமணர்களை உங்களால் முடிந்தால் இந்தியாவில் உள்ள ப்ராமணர்களை உங்கள் நாட்டிற்கு அழைத்துகொள்ளுங்கள். ப்ராமணன் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டிற்கு எதிராக செயல்படமாட்டான். மாறாக அந்த நாட்டிற்கு உதவியாக இருப்பான் என்பதால் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் குடியேற அனுமதிக்கின்றனர்.  

எந்த ஒரு நாளிலும் ப்ராமணர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக இருந்துள்ளனர். கடவுளுக்கு நன்றி. ஏனெனில் எனக்கு திருமணம் ஆகி வாரிசு பிறந்து அது இந்நாட்டில் கல்வி வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டு இன்னும் சொல்லொன்னாத துயரங்களை அனுபவிக்காமல் இருக்க ஏதுவாக ஆண்டவன் எனக்கு திருமணம் செய்விக்கவில்லை என்பதில் எனக்கு சந்தோஷமே. 

இட ஒதுக்கீடு கேட்டவர்கள் கொடுத்தவர்கள் அனுபவிப்பவர்கள் இப்படி அனைவரும் ப்ராமணர்களை தங்கள் சுயலாபத்திற்காக மறந்து விட்டனர். இட ஒதுக்கீடு கேட்டவர்களே கொடுத்தவர்களே அனுபவிப்பவர்களே உங்களிடம் ஒரு கேள்வி? ப்ராமணர்கள் சுயமாக படித்துதானே வேலைவாய்ப்பை பெற்றான். நன்றாக படித்துத்தானே மேற்படிப்பை பெற்றான்.

ப்ராமணன் யாரையும் ஏமாற்றாமல் கல்வியை பெற்று நன்றாக படித்தது ஒரு குற்றமா அதுபோல வேலையில் ஒழுக்கத்துடன் நேர்மையுடன் இருந்தது ஒரு குற்றமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.