மோடியின் புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம், இந்தி திணிக்கப்படுகிறதா? சமாளிக்க வழி இதோ…

இரண்டு மொழிகளுக்கே தமிழன் நாக்கு திணறிக்கொண்டு இருக்கும்போது, இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதற்காக மும்மொழிக் கல்வியை அறிவிப்பு செய்திருக்கிறார் மோடி.


இதனை எப்படி சரிக்கட்டுவது என்பதற்கான பதிவு இது. திராவிட மொழிகளை மூன்றாவது மொழியாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தமிழை மூன்றாம் மொழிப்பாடமாகக் கற்பிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு ஏற்பாடு செய்யும் பட்சத்தில் ஆசிரியர் நியமனம் சம்பளத்தை தமிழக அரசு ஏற்கவேண்டும். 

 தமிழகத்தில் மூன்றாம் மொழியாக இம்மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மலையாளம், கன்னடம்,தெலுங்கு மூன்றாம் மொழிப் பாடமாகக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 

ஐந்து மாநில முதல்வர்களுடன் புதுவையையும் ஒருங்கிணைத்து கலந்து பேசி வெல்ல வேண்டும் என்று புது எழுத்து தெரிவித்துள்ளது. நல்ல யோசனைதான்.