பொள்ளாச்சி சபரி..! நாகர்கோவில் காசி வரிசையில் அறந்தாங்கி அப்சல்..! பெண்கள் ரொமாண்டிக் சேட்! ஆபாச வீடியோ!

பொள்ளாச்சி சபரி, நாகர்கோவில் காசி வரிசையில் தற்போது அறந்தாங்கி சேர்ந்த அப்சல் என்பவர் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த ஆண்டு பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. தற்போது காசியின் சமாச்சாரமும் அப்படித்தான். சாதாரணமாக ஆரம்பித்த காசியின் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது அறந்தாங்கி சேர்ந்த அப்சல் என்பவரும் பெண்களை ஏமாற்றி நகைகளையும் பணத்தையும் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் கோபாலசமுத்திரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் முகமது அப்சல் (வயது 23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். வீட்டிலேயே தன்னுடைய முழு நேரத்தையும் கழிக்கும் அப்சல் முகநூலை பயன்படுத்துவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து அப்சல், நல்ல பணக்கார பெண்களை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகளை காட்டிப் பேசி நட்பாக பழகி பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து அவற்றை வைத்து மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தையும் நகைகளையும் பெற்றிருக்கிறார். 

இதே போல் பெண்களுக்கு முகநூல் மூலமாக வலை வீசிக் கொண்டிருந்த அப்சல் இடம் அறந்தாங்கி மை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார். தனியாக வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணை தன் வலையில் சிக்க வைத்துள்ளார் ‌ அப்சல். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணும் ஆப்சலும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் அப்சல், இந்தப் பெண்ணிடம் பணத்தை என்னிடம் கொடு,. அதனை இருமடங்கு மாற்றி தருவேன் என்று கூறி அதிக நகைகள் மற்றும் பணத்தை பெற்றிருக்கிறார். 

இதே நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவர் நகை மற்றும் பணத்தை பற்றி கணக்கு கேட்டிருக்கிறார். பெண்ணிற்கு கணவரிடம் நெருக்கடி அதிகரிக்கவே பணத்தையும் நகையையும் திருப்பித் தருமாறு அந்த பெண் அப்சல் இடம் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அப்சலின் சுயரூபம் அந்த பெண்ணிற்கு தெரியவந்தது. எவ்வளவோ கேட்டும் அந்தப் பெண்ணிடம் அப்சல் பணம் தர மறுத்துள்ளார். மேலும் அப்சலும் அந்த பெண்ணும் நெருக்கமாக பேசிய ஆடியோ பதிவு ஒன்றை அவரது கணவருக்கு அனுப்பி வைத்து அவரது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அறந்தாங்கி காவல் நிலையத்தில் சென்று அப்சல் மீது புகார் அளித்திருக்கிறார். இதனை சாதாரண வழக்காக விசாரித்த போலீஸ் அதிகாரிகள் வழக்கின் தீவிரத்தை உணர்ந்த உடன் அதிர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளனர். இந்த ஒரு பெண்ணிடம் மட்டுமே இந்த ஏமாற்று வேலையை கையாண்டதாக கருதப்பட்ட அப்சல் இவரைப்போலவே பல பெண்களிடமும் தன்னுடைய லீலைகளை காண்பித்து பணம் நகைகளை மிரட்டி பெற்று இருக்கிறார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

இதுவரை சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர், காரைக்குடியை சேர்ந்த பெண், உட்பட 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகை மற்றும் பணத்தை பெற்றுள்ளதாக அப்சல் மீது புகார் எழுந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அப்சலால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தங்களது புகார்களை ரகசியமாக போலீசாரிடம் அளிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.