முகம், உடலை மறைத்து பர்தா! விழாவில் பங்கேற்ற ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா பொது நிகழ்ச்சியில் பர்தா அணிந்து வந்தது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான கண்டனக் கணைகளுக்கு வழிவகுத்தது.


ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்த .ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் வழங்கப்பட்டதன் 10-ஆண்டு தினம் மும்பை தாராவியில் கொண்டாடப்பட்டது. அதில் .ஆர்.ரஹ்மானுடன் அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார்

 

மேடையில் பர்தாவுடன் ஏறிய அவர், அதனால் விளையப் போகும் பின் விளைவுகளை அப்போது அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர் அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான போது எதிர்கொண்ட எதிர்ப்புகளையும், கண்டனக் கணைகளையும் ரஹ்மான், கதீஜா இருவருமே எதிர்பார்க்கவில்லை

 

.ஆர்.ரஹ்மான் தன் மத நம்பிக்கைகளை தனது மகள் மீது திணிப்பது கொடூரமானது என்றும், .ஆர்.ரஹ்மான் போன்றவர்களுக்கு இதுஏற்புடையதல்ல என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன

 

ரஹ்மான் இரட்டை வேடம் போடுவதாகவும், இசைதான் உங்கள் மதம் என  எண்ணியிருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்ற வகையிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன

 

இவற்றுக்கு ரஹ்மான் கதீஜா இருவருமே சமூக வலைதளத்தில் பதில் தெரிவித்துள்ளனர். .ஆர்.ரஹ்மான் தனது மகள்கள் கதீஜா, ரஹீமா, தன் மனைவி சாய்ரா பானு ஆகியோர்  மாறுபட்ட உடைகளில் நீடா அம்பானியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது பெண்கள் வீட்டு சுதந்திரத்தை தான் கட்டுப்படுத்துவதில்லை என விளக்கியுள்ளார்

 

கதீஜா தனது பதிவில் தனது மதம் சார்ந்த ஆடைத் தேர்வு தனது சொந்த விருப்பமே தவிர தனது தாயோ தந்தையோ தன்னைக் கட்டுப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்

 

தான் மேஜரான பெண் என்றும் தனது மதம் சார்ந்த நெறிகளை தான் முழு மனதுடன் மதிப்பதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் என்றும், அதனை உணராமல் ஒவ்வொருவரும் தவறான சுய கணிப்புகளின் அடிப்படையில் விமர்சனங்களை வெளியிடுவது அறிவீனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.