ரசிகர்களுக்கு முருகதாஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி! கொண்டாடும ரஜினி ரசிகர்கள்! என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் திரைப்படத்தை பற்றி சுவாரஸ்யமான ஒரு அப்டேட்டை அந்த படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.


இதன் படி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், சூப்பர் ஸ்டார் நடித்து வரும் தர்பார் படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரஜினியின் HD புகைப்படங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக கூறி ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் வடிவமைக்கும் போஸ்டர்களில் எந்த டிசைன  சிறந்ததாக உள்ளதோ அதை தர்பார் படக்குழுவினர் தேர்ந்தெடுத்து அந்த போஸ்ட்டரை அதிகாரபூர்வமாக வெளியிடவும்  இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.

இந்த செய்தியை கேட்டு  ரஜினி ரசிகர்கள்  மட்டுமில்லாமல், கிரியேட்டிவ் ஆக போஸ்டர் வடிவமைப்பவர்களும் இந்த பொன்னனான வாய்ப்பை கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில்,  இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். தர்பார் படத்தில் யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவடையும் என்றும், தர்பார் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.