கிருஷ்ணபிரியா தோழி திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ராகுல் கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஜெயா தொலைக்காட்சி மூலம் நேயர்களுக்கு நன்கு அறிமுகமான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு, காங்கிரஸ் கட்சியில் தேசிய மகிளா காங்கிரஸ் கட்சியில்முக்கியப் பதவி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அஜய் ரெட்டியாக இருந்து அப்சரா ரெட்டியாக மாறிய திருநங்கைக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கிறார் ராகுல்காந்தி. ஆனால் அப்சரா  தாவிய நான்காவது கட்சிதான் காங்கிரஸ் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். பத்திரிகையாளராக அறியப்படும் அப்சரா ரெட்டியின் பழைய வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்.  

13வது வயதில்தான் தன் உடலில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை அஜய் உணர்ந்திருக்கிறார்.மற்ற பையன்கள் போன்று பெண்கள் மீது எந்த விருப்பமும் இல்லாமல் ஆண் நண்பர்களுடன் பழகுவது மட்டுமே ஆன்ந்தமாக இருந்திருக்கிறது. தன் உடல் மாற்றம் குறித்து இணையத்தில் மேய்ந்து ஓரளவு  புரிந்திருக்கிறார். திருநங்கை பற்றியும் பெண்ணாக மாறுவதற்கு செய்துகொள்ளும் அறுவை சிகிச்சை குறித்தும் அறிந்துகொண்டார்.

ஆனால், வீட்டுக்குத் தெரியாமல் எப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்வது, அவ்வளவு பணம் எவ்வளவு புரட்டுவது என்று யோசனையுடன் இருந்த நேரத்தில் அப்சராவை ஆஸ்திரேலியாவுக்கு கல்லூரி படிக்க அனுப்பியிருக்கிறார்கள். அங்கே பாலினம் அத்தனை பிரச்னையாக இல்லை. அத்னால்  இவரைப் போன்ற மனநிலையுடன் இருந்தவருடன் பழகியிருக்கிறார். அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் ஹார்மோன் மாற்ற்ம், அறுவை சிகிச்சைக்கும் இன்சூரன்ஸ் இருப்பது தெரியவந்திருக்கிறது. 

அறுவை சிகிச்சைக்கு முன்னர் ஹார்மோன் சிகிச்சை செய்யத் தொடங்கியிருக்கிறார். இதற்கு ஆஸ்திரேலியாவில் ஜர்னலிசம் படித்ததும் நம்பிக்கையளித்திருக்கிறது,  ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டே, பல பத்திரிகைகளுக்கு எழுதி பணம் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறார் அப்சரா. அதன் பிறகே தன்னைப் பற்றி வீட்டில் தெரிவுத்தார் அப்சரா.

இந்தியாவுக்கு வந்த அப்சரா, அவருக்கு நெருக்கமான டாக்டர் உஷா ஸ்ரீராமுடன்  தன் குடும்பத்தைச் சந்தித்து, அவருடைய மனநிலையைப் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறார். வழக்கம்போல் குடும்பத்தாரும், சுற்றத்தினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அப்சராவின் அம்மா துணையாக இருந்ததால், அந்த நாட்களை கடந்துசெல்ல முடிந்தது என்கிறார் அப்சரா.

அதன்பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் சிறப்பு பக்கங்களில் பணியாற்றத் தொடங்கினார். அப்போதும் பல்வேறு எதிர்ப்புகள், நையாண்டிகளை சந்தித்தவர், அதன்பிறகு டெககான் கிரானிக்கல் பத்திரிகைக்கு மாறினார். அந்த நேரத்தில்தான் ஒரு அரசியல்வாதியுடன் அப்சராவுக்கு அறிமுகம் ஏற்பட்டது.  ஆதரவாக பேசிய அவரும் கடைசியாக பண்ணை வீட்டுக்கு அழைக்கவே, தன் வாழ்க்கையை  நினைத்து நொந்துபோய் அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

அதுவரை ஹார்மோன்  சிகிச்சை மட்டுமே எடுத்துக்கொண்ட்  அப்சரா,  அதன்பிறகு தாய்லாந்துக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து முழு பெண்ணாக மாறியிருக்கிறார். அன்றுதான் புதிதாகப் பிறந்தது போல் உணர்ந்தேன் என்கிறார் அப்சரா. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தெரிந்தவர்களும், நண்பர்களும் கேட்ட கேள்விகள் மிகுந்த ஆபாசம் என்று வருந்துகிறார்.

பா.ஜ.க.வில் மூன்றாம் பாலினத்துக்கு தனி மரியாதை தருவதாகத் தெரியவே தமிழிசை செளந்தர்ராஜனை சந்தித்து கட்சியில் இணைந்தார். சென்னைக்கு வந்த பா.ஜ.க. தலைவர் அமீத் ஷாவும் அப்சரா ரெட்டியை சந்தித்துப் பாராட்டியிருக்கிறார். அதன்பிறகு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் நட்பு கிடைக்கவே ஜெயா டி.வி. வாய்ப்பு கிடைத்தது. அதனால் அ.தி.மு.க.வுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட குளறுபடியால் தினகரன் தனியே பிரிந்து அ.ம.மு.க. தொடங்க, ஜெயா டி.வி.காக அந்தக் கட்சிக்கு மாறினார். ஆனால், அதன்பிறகு கிருஷ்ணபிரியாவுக்கும் தினகரனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் குஷ்பு மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவெடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தார். சரியான நேரத்தில் குஷ்பு மூலம் மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவை சந்தித்தார்.

அந்த சந்திப்பு இனிமையாகவே ராகுல்காந்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே ஓடோடிப் போனார் அப்சரா. வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவரான அப்சரா ரெட்டிக்கு மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் பொறுப்பு கொடுத்து ராகுல் காந்தி கெளரவம் செய்திருக்கிறார். இது தன்னுடைய வாழ்வில் கிடைத்த அற்புதம் என்கிறார் அப்சரா.

அப்சரா புண்ணியத்தால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக நாலு வோட்டு கிடைத்தால் நல்லதுதான்.