ஏப்ரல் 1ம்தேதி கருப்பு தினம்..! கேரளாவை அலறவிடும் மருத்துவர்கள்!

கொரோனா நோய் எதிர்ப்புக்கு கேரளாவைச் சேர்ந்த அத்தனை மருத்துவர்களும் அரம் சேர்த்து போராட வருகின்றனர். அதேநேரம், அரசு ஒரு தவறான முடிவு எடுக்கும்போது சட்டென தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும் ஒன்று சேர்ந்துள்ளனர்.


அதனால், ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமையை கருப்பு தினமாக அனுசரிக்க கேரள மாநில அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு காரணம், மது நோயாளிகளுக்கு மது கொடுப்பதற்கு அரசு எடுத்த முடிவுதான் 

மதுவுக்கு அடிமையானவர்கள் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தால், அவர்களுக்கு மது வழங்குமாறு கேரள மாநில அரசு எடுத்திருக்கும் முடிவுக்குத்தான் இந்த மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மது நோயாளிகளை குணப்படுத்த வேண்மே தவிர, மீண்டும் மது கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமையன்று அனைத்து மருத்துவர்களும் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் வெற்றிபெறட்டும்.