நொடியில் இடிந்து சுக்கு நூறான 19 மாடி சொகுசு குடியிருப்பு! அதிர வைக்கும் வீடியோ உள்ளே!

கேரளாவில் கொச்சியில் உள்ள மரடு என்ற பகுதியில் கட்டப்பட்டிருந்த 19 மாடி கட்டிடம் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சுமார் ஒன்பது வினாடிகளில் தகர்க்கப்பட்டது.


கேரளாவில் கொச்சியில் உள்ள மரடு என்ற பகுதியில் நான்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த நான்கு அடுக்கு மாடி கட்டிடத்தையும் அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மக்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி அவர்களும் அந்த இடத்தை விட்டு காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டனர்.

ஹெச்டூஓஹோலி பெய்த், ஆல்பா செரைன், ஜெயின் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் பெட்ரோலியம் எஸ்போஸிவ்  சேஃப்டி ஆர்கனைசேஷன் என்ற நிறுவனத்தின் உதவியை கொண்டு அந்த கட்டிடத்தை இடிப்பதற்கு காவல் துறை முடிவு செய்தது. அந்நிறுவனம் இந்த கட்டிடங்களை ஆராய்ந்து பார்த்து பின்னர் அந்தக் கட்டிடங்களின் அடிப்பகுதியில் ஆயிரக்கணக்கில் துளைகளை போட்டனர். அந்த துளைகளின் வழியே அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் செலுத்தப்பட்டது. இதன் மூலம் கட்டிடம் இடிந்து பூமி குள்ளேயே சென்றுவிடும் என்று அந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறினர்.

இந்த கட்டிடங்கள் நகரத்தின் முக்கிய பகுதிகளில் அமைந்திருப்பதால் அங்கிருக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அந்த நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பை சுற்றி உள்ள பொதுமக்கள் அங்கிருந்து காலி செய்யப்பட்டு வேறு இடங்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் .

தற்போதைக்கு அந்த குடியிருப்பை சுற்றி உள்ள இடங்களில் மின்சாரம், நீர் ஆகிய எல்லா வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . தற்போதைய குடியிருப்புக்களை இடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.