ஒன்னே கால் கோடி ரூபாய் மட்டும் அல்ல..! வெளியே சொல்லாமல் கொரோனா நிவாரணத்திற்கு அஜித் செய்த மற்றொரு உதவி..! என்ன தெரியுமா?

பிரபல திரைப்பட நடிகர் அஜித் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சற்று முன்பு 1.25 கோடி நிதியுதவி அளித்து இருந்தார். தற்போது அது மட்டும் இல்லாமல் வெளியே சொல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார்.


உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் கடந்த சில நாட்களாகவே அதி வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4500 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல தமிழ்நாட்டில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் கொரோனா மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கடந்த சில நாட்களாகவே பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பிரபல திரைப்பட நடிகர் அஜித் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் அஜித் 50 லட்சம் ரூபாயை பிரதமர் பொது நிவாரண நிதிக்காகவும், 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகவும், சினிமா படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி ஊழியர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கி இருந்தார். தற்போது அது மட்டும் இல்லாமல் மேலும் 7‌.5 லட்சம் ரூபாயை நடிகர் அஜித் , மக்கள் தொடர்பாளர் (PRO) யூனியன் மற்றும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.  

அதன்படி 2.5 லட்சம் ரூபாயை மக்கள் தொடர்பாளர் (PRO) யூனியனுக்கும், 5 லட்சம் ரூபாயை சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கும் நடிகர் அஜித் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.