பெண் தெய்வ அபிசேகமும் - காமப் பார்வையும்..! கிரேஸி மோகன் மாட்டு மூத்திரத்தை குடித்தால் நீங்களும் குடிப்பீர்களா விஜய் சேதுபதி?

பெண் தெய்வங்கள் உடை மாற்றுவதை ஏன் காட்டுவதில்லை என்று மிகவும் அறுவெறுப்பான ஒரு கேள்வியை கேட்டுவிட்டு தற்போது கிரேஸி மோகன் கூறியதை யே தான் கூறியிருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி அளித்துள்ள விளக்கத்திற்கான பதில் தான் இது.


நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராகக் கூட எதிர்காலத்தில் அவர் வளர்ச்சி அடையலாம். அதற்கான தகுதி விஜய் சேதுபதிக்கு இருக்கிறது. திறமையும் உள்ளது. சிறந்து சிந்தனைவாதி, பொது நலன் மீது அக்கறை கொண்டவர்.

இதில் எல்லாம் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களை அதிலும் இந்துக்களை மனம் வருந்தும்படி பேசிவிட்டு அது சரிதான் என்பது போல் அறிக்கை விடுவது எந்தவிதத்தில் நியாயம். தங்களை அறியாமல் சில முறை தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு. இது சாமான்யர்கள் முதல் சமுதாயத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை இயல்பான ஒன்று தான்.

அந்த வகையில் சன் டிவி நிகழ்ச்சியில் நான் பேசியது என்ன பேசினேன் என்று அறியாமல் பேசிவிட்டேன், பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியிருநதால் விஜய்சேதுபதியை ஒரு பக்குவமான மனிதராக ஏற்றுக் கொண்டு இருக்கலாம். ஆனால், விஜய் சேதுபதி சன் டிவி நிகழ்ச்சியில் பேசியது என்ன? 

கோவில்களில் கடவுள்கள் குளிக்கும் போது காட்டுகிறார்கள் ஆனால் உடை மாற்றும் போது காட்ட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி. இது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இந்துக்கள் கொதிக்கிறார்கள். அது எப்படி இந்து சமய வழிபாட்டு முறையை விஜய்சேதுபதி கேள்விக்கு உள்ளாக்கலாம்?

இதுவா பேச்சுரிமை விஜய்சேதுபதி? யாருக்கும் தங்கள் கருத்துகளை கூற அனுமதி இல்லையா? பேச்சு உரிமை கிடையாதா? என்று ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து அறிக்கை விடுகிறீர்கள். கிரேஸி மோகன் பேசியதைத்தான் விஜய் சேதுபதி பேசியுள்ளார் என்று தேவையில்லாமல் ஒருவர் பெயரை உள்ளே இழுத்துள்ளீர்கள்.

கிரேஸி மோகன் கூறினால் நீங்கள் கூறுவீர்களா? அவர் மாட்டு மூத்திரைத்தை குடிப்பார், நீங்கள் குடிப்பீர்களா விஜய் சேதுபதி. உங்களுடைய பேச்சு இந்துக்களில் சிலரின் மனைத புண்பட வைத்துள்ளது. உங்கள் மீது கோபம் அடைய வைத்துள்ளது. உங்களுக்கு ஆதரவாக களம் இறங்குபவர்கள் நிம்மதி வேண்டும் என்றால் சரக்கடிக்க பார்களுக்கு செல்பவர்கள். ஆனால் உங்களை எதிர்ப்பவர்கள் நிம்மதி வேண்டும் என்றால் கடவுளை தரிசிக்க ஆலம் செல்பவர்கள்.

எனவே தவறாக பேசுவதும் அதனை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும் தவறு இல்லை. நீங்கள் ஒரு மாபெரும் திரைக்கலைஞன் மட்டும் இல்லை மனிதன் என்றும் நிரூபிக்க வேண்டிய தருணம். இல்லை என்றால் மறுபடியும் நாங்கள் கேட்பது கிரேஸி மோகன் மூத்திரத்தை குடித்தால் நீங்களும் குடிப்பீர்களா? என்பது தான்.