அப்பலோ ஹாஸ்பிடலில் பணியாற்றிய பெண்ணுக்கு டெங்கு..! சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்த பரிதாபம்!

டெங்கு காய்ச்சலால் இளம்பெண் உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பூந்தமல்லிக்கு அருகே காட்டுப்பாக்கம் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட ராயல் கார்டன் என்ற இடத்தில் லாவண்யா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் வானகரம் பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நிர்வாகத்துறையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அப்பல்லோ மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி நேற்று லாவண்யா உயிரிழந்துள்ளார். காட்டுப்பாக்கம் பகுதியில் குப்பைகள் அதிகளவில் கிடப்பதாகவும், அதன் மூலம் மழை பெய்கின்ற போது தண்ணீர் அதிகளவில் தேங்குவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய தண்ணீர் தேங்கும் இடங்களிலிருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

மேலும் குப்பைகளை விரைந்து அகற்றவும், காட்டுப்பாக்கம் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் அப்பகுதி மக்கள் சுகாதாரத் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.