ஒருபக்கம் கொரோனா..! மறுபக்கம் இந்தியா எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் ஐநா..! என்னது தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்குதலை காட்டிலும் இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் வருங்காலத்தில் அதிகளவில் இருக்கக்கூடும் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.


இந்தியா முழுவதிலும் 26,917 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 5,914 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 826 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா தற்போது சந்தித்து வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை காட்டிலும் வருங்காலத்தில் வேளாண்துறையில் கடுமையான சவால்களை சந்திக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதாவது ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து வெட்டுக்கிளிகள் ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வழியாக இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விளைநிலங்களை பிற நாடுகளிலிருந்து வரும் வெட்டுக்கிளிகள் அழித்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏற்படும் காலத்தில் இந்தியாவில் வேளாண் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் உணவு பற்றாக்குறை ஏற்படு வதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ஸ்கொயர் கிலோமீட்டர் பரப்பளவில் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்றும், அவை தினமும் 35 ஆயிரம் பேருடைய உணவை சாப்பிட்டு விடும் என்றும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலினால் முழு பிதுங்கி உள்ள மத்திய அரசாங்கத்தை, இந்த ஆய்வில் அறிவிப்பானது மென்மேலும் கலங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.