அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக கலங்கி வருகிறார் காஜல் அகர்வால்
அரசனை நம்பி புருசனை கைவிட்டுவிட்டேன்! புலம்பும் காஜல் அகர்வால்!

அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி வந்தாலும் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று வருபவர் காஜல் அகர்வால. எப்போது வந்தாலும் தமிழில் இவருக்கென ஒரு மார்கெட் உள்ளதும, ரசிகர்களும் அப்படித்தான் அவரது படமென்றால் வழிந்துவிடுவார்கள்.
இந்நிலையில் கட்சி ஆரம்பித்த கமல் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காஜலுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மிகப்பெரிய நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பெரும் பட்டாளம் அமைந்ததால் ஸ்வீட் நடிகை உடனெ ஓகே சொல்லிவிட்டார்.
பட வேலைகளும் படு மும்முரமாக ஆரம்பமாகி சென்று கொண்டு சென்று கொண்டிருக்க திடீரென கமல் படவேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு மையத்தை பார்க்க அரசியல் மேடையேறி விட்டார். இதே நேரத்தில் தனக்கு வந்த பல வாய்ப்புகளை தட்டிக் கழித்து விட்டு மைய நடிகருடன் ஜோடி சேர்ந்து பெரும் பிரபலத்தை அடையலாம் எண்ணிக்கொண்டிருந்த காஜல் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தற்போது மீண்டும் எப்போது அந்த படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. இதனால் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட வாறு ஒரு படத்திற்காக பல படங்களை வாய்ப்புகளை தவறவிட்டு விட்டு நிற்கதியாக புலம்பி உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அந்த ஸ்வீட் நடிகை.