தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது !!

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: District Judge காலியிடங்கள்: 31 சம்பளம்: மாதம் ரூ.51,500 - 63,070 வயதுவரம்பு:01.07.2019 தேதியின்படி பொதுப்பிரிவினர் 35 முதல் 45 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 35 முதல் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: இரு கட்டமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.04.2019 முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.05.2019 - 26.05.2019 விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. இதனை வங்கி செலான் ஆக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cms.tn.gov.in/sites/default/files/job/notification_1_130119_district_judge.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2019