ஸ்டாலினுக்கு டென்ஷனை உருவாக்கும் அழகிரி. விரைவில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவிப்பு.

ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சிகளைவிட சொந்தக் குடும்பத்தினர் கொடுத்துவரும் இடைஞ்சலும், தொந்தரவும்தான் அதிகம். மு.க.அழகிரி, கனிமொழி, கலாநிதி மாறன் ஆகியவர்கள் அவ்வப்போது அலறவிடுவார்கள்.


அந்த வகையில் இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, ஸ்டாலின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் பேசியிருக்கிறார். 

மதுரை வில்லாபுரம் பகுதியில் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர்.மருதுவின் வீட்டிற்கு சென்று அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிறகு, மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், ’வரும் 2021சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் எனவும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு விரைவில் நிர்வாகிகளை ஆலோசித்து எனது முடிவை அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார்.

துரை தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு அமித்ஷாவை நான் சந்திக்க போவதாக கூறிய வதந்தி போன்றது தான் அந்த செய்தியும் என்றார். எப்படியோ அழகிரி சும்மா இருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிஜம்.