சிவனுக்கு அமாவாசை தோறும் அன்னாபிஷேகம்! இந்த அதிசய தலம் எங்குள்ளது தெரியுமா?

பொதுவாக ஐப்பசி பவுர்ணமி தினத்தில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது மரபாக உள்ளது


ஆனால் ஒரு தலத்தில் வித்தியாசமாக அமாவாசை அன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. அதுவும் மாதந்தோரும் அமாவாசையில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது

வித்தியாசமான அந்தத் தலம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில். இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் திருவாரூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் செல்லும் சாலையில் விளமல் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.

நீத்தார் கடனை முழுமையாக, முறையாகச் செய்ய இயலாதவர்கள் அமாவாசை நாளில் இத்தலம் வந்து கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி பின்னர் பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றுகிறார்கள். இதனால் அவர்களது முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர் என்பது ஐதீகம்.

மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பான பலனைத்தரும். குறிப்பாக அகால மரணமடைந்தவர், இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு இந்த அபிஷேகத்தால் பலன் கிடைக்கிறது.