கற்பழிக்கும் போது தடுக்க முடியலனா என்ஜாய் பண்ணனும்..! பெண் பத்திரிகையாளரின் வில்லங்க யோசனை..!

கற்பழிப்பு நடந்தால் அதனை எதிர்த்துப் போராட முடியவில்லை என்றால் அதனை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று எம்பி மனைவி வெளியிட்ட முகநூல் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


தற்போது எல்லா இடங்களிலும் பருவமழை ஆரம்பித்து வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. எர்ணாகுளத்தில் விடாமல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பிரமுகர்களும் நட்சத்திரங்களும் தங்களுடைய சமூக வலைதளத்தின் மூலம் மக்களுக்கு தேவையான கருத்துக்களையும் உதவிகளையும் செய்து வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடனின் மனைவி அன்னா லிண்டா ஈடன் மழையின் வெள்ளத்தை மிகவும் மோசமான முறையில் வருணனை செய்து அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

எர்ணாகுளம் முழுவதும் வெள்ளத்தில் சூழ்ந்திருக்கும் இந்நிலையில் , அண்ணா லிண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ," விதி என்பது கற்பழிப்பு போன்றது , அதனை தடுக்க முடியவில்லை என்றால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார் . நகைச்சுவை என்ற பெயரில் இவர் வெளியிட்ட இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் அண்ணா லிண்டாவை கண்டபடி திட்டி வருகின்றனர். 

மேலும் இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்களில் சிலர் , கற்பழிப்பு என்பது விதி கிடையாது. அது ஒரு ஆணின் ஆதிக்கம் பெண்ணின் மீது செலுத்தப்படுவதால் ஏற்படுவது என்றும் இயற்கை தந்த வரப்பிரசாதமான மழையை வெள்ளமாக மாற்றுவதற்கான காரணமாக அமைந்திருப்பது மனிதர்களாகிய நாம் செய்த சில தவறுகள் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் இடம் விழுந்து எழுந்து வந்த தொடர் எதிர்ப்பின் காரணமாக அன்னா லிண்டா ஈடன் என்ற அவர் வெளியிட்டுள்ள அந்த சர்ச்சைக்குரிய பதிவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். மேலும் அந்தப் பதிவிற்கு பதில் அளித்த அவர் நகைச்சுவை எண்ணத்தில் பதி விட்டதாகவும் அதை எவருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக செய்யவில்லை எனவும் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.