அண்ணா பல்கலை சேவை செய்யவா அல்லது பணம் சம்பாதிக்கவா…?

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு உயர் அந்தஸ்து கிடைத்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறியிருக்கும் விவகாரம் பல்வேறு மட்டத்தில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது.


ஏனென்றால், அண்ணா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது வருமானம் பார்க்க அல்ல, தமிழக மக்களுக்கு தரமான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டு அதில் சிறப்பாக பங்காற்றியும் வந்தது. 

ஆளுநர் ,சூரப்பா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அனைவரும் சேர்ந்து அண்ணா பெயரிலான அந்த பல்கலைக்கழகத்தையும் வட இந்தியர்களுக்கு தாரை வார்த்து தமிழக மாணவர்கள் நுழைய முடியா வண்ணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிண்டி கேம்பஸில் துவங்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர். அண்ணாவின் பெயரால் ஆட்சி செய்கிறவர்கள் எம்.ஜி.ஆர் வைத்த அண்ணாவின் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தைக் கூட காப்பாற்ற துப்பில்லித்தாவர்கள் என்பதை வரலாறு எழுதி வைக்கும் என்று கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.