திவாலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்..! பதவியை ராஜினாமா செய்த அம்பானி..! நாடு முழுவதும் பரபரப்பு!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பணியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில காலமாகவே அதிகப்படியான கடன் பிரச்சினையை சுமந்துகொண்டிருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தொடர்ச்சியாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பல முதன்மை அதிகாரிகள் தொடர்ந்து தங்களுடைய ராஜினாமா கடிதத்தை அளித்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த அணில் அம்பானி தன்னுடைய ராஜினாமாவை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நிறுவனத்தில் பணியாற்றும் முதன்மை அதிகாரி மணிகண்டன் தன்னுடைய பணியை விட்டு விலகினார்.

இந்நிலையில் திடீரென்று யாருமே எதிர்பாராத வகையில் அனில் அம்பானியும் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் அனில் அம்பானி உடன் இணைந்து மற்ற இயக்குனர்களான ரைனா கராணி, சுரேஷ் ரங்காஷர், சாயா விராணி, அஞ்சரி காக்கர் உள்ளிட்டோரும் தங்களுடைய பதவியில் இருந்து விலகியுள்ளனர். 

இந்நிறுவனத்தின் மீது இருக்கும் கடன் சுமை தான் உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் இதிலிருந்து வெளியேற்றுவதற்கான முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. அதாவது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை- செப்டம்பர் 2019 காலகட்டத்தில் மட்டும் 30,142 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனுடைய விளைவு தான் இத்தனை அதிகாரிகள் தங்களுடைய வேலையை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.