அனீமியாவால் அவஸ்தையா… மக்காசோளம் எடுத்துக்கோங்க…

மக்காசோளத்தில் வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்துக்கள், ஹார்போஹைட்ரேட் சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதனால் பாப்கார்னாக மட்டுமின்றி உணவாகவும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதே.


·         சோளத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டுகிறது. அனீமியாவை விரட்டி ரத்தத்தை விருத்தி செய்யவும் துணை புரிகிறது.

·         நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரணத்தில் முக்கிய பங்கு வகித்து, மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

·         சோளத்தில் அதிக அளவு போலிக் ஆசிட் இருப்பதால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

·         உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் நிறைய அளவுக்கு மக்காசோளம் சாப்பிடுவது நல்லது.