இப்போது இணையத்தில் உலவும் வைரல் வீடியோக்களில் ஒன்று, ஆண்டிப்பட்டி தொகுதியில் ஓட்டுப் போட்ட பெண் ஒருவர் பேசுவதுதான்.
ரவீந்திரநாத்தை நாறடிக்கும் பணம் பிடுங்கும் வீடியோ! யாரு வேலைன்னு தெரிஞ்சா அப்டியே ஷாக் ஆகிடுவீங்க!

நான் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடலைன்னு தெரிஞ்சுக்கிட்டு, கொடுத்த ரூபாயை திருப்பித்தரச் சொல்லி கேட்டாங்க. நானும் தூக்கி வீசிட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த வீடியோ செட்டப் செய்யப்பட்டது என்று அலறுகிறது ரவீந்திரநாத் தரப்பு. அதாவது உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கச்சொல்லி 30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாம். அந்த நபர் யாருக்கும் பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இதுகுறித்து விசாரிப்பதற்காக ரவீந்திரநாத் தரப்பில் இருந்து ஆட்கள் உசிலம்பட்டிக்குப் போய் அந்த நிர்வாகியை தூக்கியிருக்கிறார்கள். நான் எல்லோருக்கும் பணம் கொடுத்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே யாருக்கெல்லாம் பணம் குடுத்தே என்று சில வீடுகளுக்குப் போய் விசாரித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை தங்கம் குரூப் ஆட்களுக்கு சொல்லியிருக்கிறார். உடனே அவர்கள் ஆட்களை செட்டப் செய்து, பணத்தை பறிப்பதற்காக வீடு வீடாக ரவீந்திரநாத் ஆட்கள் வருவதாக வீடியோவை சமூக வலைதளத்தில் பரவவிட்டனர். இதற்கு ஆளும் கட்சியிலே சிலரும் சப்போர்ட். உடனே பதறிப்போன ரவீந்திரநாத் குரூப் வேறு யாரையும் விசாரிக்காமல் வந்துவிட்டனர்.
ஆனால், மீண்டும் மீண்டும் அந்த வீடியோவைப் போட்டு ஓபிஎஸ். மானதஹி வாங்கி வருகிறார்கள். ‘அவங்க ஓட்டுப் போடலைன்னு எங்களுக்கு எப்படி தெரியும்? யாராச்சும் குடுத்த காசை திரும்பக் கேட்பாங்களா?’ என்று கண் சிவக்கிறது ஓ.பி.எஸ். குரூப்.
ஒரு வீடியோவுக்குள் இத்தனை வில்லங்கமா..?