தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என வெளியான தகவல்களால் தனது கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈமுடுபட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு! கையை வெட்டிக் கொண்டு தற்கொலை முயற்சி! MLA வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
தொழில்ரீதியாக மருத்துவரான சுனில் அந்த வீடியொவில் ஜெகன் சார் ஐ லவ் யூ வெரி மச். ஆனால் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என வெளியான தகவல்களால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். நான் உங்கள் கால் தடத்தை 5 ஆண்டுகள் பின்பற்றியவன்.
தற்போது என் இறப்புக்கு முன் இந்த வீடியோவை உங்களுக்கு அனுப்புகிறேன் பேசியிருந்தார். ஆனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து அவர் தனது குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு காப்பாற்றப்பட்டதால் தற்கொலை முயற்சி தோல்வியடைந்த்து.
அவர் தற்போது நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என பரவிய தகவலாலும் தனது அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தாலும் அவர் மனநிலை குழம்பிய நிலையில் இருந்ததாக சுனிலின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 23 எம்.எல்.ஏ.க்களுடன் சுனில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்குச் செல்ல முயன்றதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் சுனில் கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் சுனிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிறார்கள்.