என்னால் முடியவில்லை..! பலர் முன்னிலையில் மேடையில் கதறி கண்ணீர் விட்ட விஜய் டிவி பிரியங்கா..! நெகிழ்ச்சி காரணம்!

பிரபல தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா.


இவர் தற்போது மா கா பா ஆனந்த் உடன் தி வால் என்ற நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் தன் வாழ்வில் அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் கூறினார். முப்பத்தி மூன்று வருடமாக கணவர் இல்லாமல் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு தனி ஒருவராக அந்தப் பெண்மணி தன்னுடைய மகளை படிக்க வைத்து வருகிறார்.

இவ்வளவு துயரங்களை தாண்டி இந்தப் பெண்மணி திவால் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று 59 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசு தொகையை வென்றுள்ளார். இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வந்த அந்த பெண்மணி இந்த போட்டியில் பங்குபெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை எண்ணி தொகுப்பாளர் பிரியங்கா கண்ணீர் விட்டு பேசினார். இந்த எபிசோடை என்னுடைய வாழ்நாளிலே மறக்க முடியாது எனவும் பிரியங்கா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்கா முப்பத்தி மூன்று வருடமாக தனி ஒரு பெண்மணியாக பல இன்னல்களையும் துயரங்களையும் தாண்டி வந்ததற்கு கடவுள் கொடுத்த பரிசு என கூறிய பிரியங்கா, மூன்று வருடங்கள் மட்டும் கணவருடன் வாழ்ந்து பின்னர் கணவர் இல்லாமல் இத்தனை வருடங்கள் இந்த சமுதாயத்தில் தனி ஒரு பெண்மணியாக போராடி ஒரு நாளைக்கு 200 ரூபாய் வருமானத்தில் தன் மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்த இந்த தாய்க்கு கடவுள் கொடுத்த பரிசு எனக்கூறி தொகுப்பாளர் பிரியங்கா கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளினி பிரியங்கா மேடையிலேயே கண் கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.