விவாகரத்தான அந்த நடிகர் மீது எனக்கு எப்போதும் மோகம் உண்டு..! அவரை நான் காதலிக்கிறேன்..! ஏக்கத்தில் விஜய் டிவி டிடி!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர்தான் என்னுடைய "ஆல்டைம் கிரஷ்" என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.


இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆவார். இவர் பிரபல ஹிந்தி சினிமா பட இயக்குனரான ராகேஷ் ரோஷன் என்பவரின் மகனாவார். தந்தை திரையுலகை சார்ந்து இருந்ததால் சிறுவயது முதலேயே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

அதன்பின்பு தன் தந்தை இயக்கிய "கஹோ நா பியார்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஹிந்தி சினிமாவில் கால் பதித்தார். நடிக்க ஆரம்பித்த சில காலங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது . இளம்பெண் ரசிகைகளும் ரசிகர்களும் அவரை காண குவிய துவங்கினர்.

இந்தி சினிமாவில் நடித்த நடிகருக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இவரது நடிப்பைப் பாராட்டி இவருக்கு லண்டனில் உள்ள மியூசியத்தில் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிருத்திக் நேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். நாடெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து பெரிய வாழ்த்துக்கள் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளது .

அந்த வகையில் இவருக்கு தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தன்னுடைய வாழ்த்துக்களை டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர்தான் என்னுடைய "ஆல் டைம் கிரஷ்" எனவும்  அவரை தான் காதலிப்பதாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் டிடியை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.