தருமபுரி! அன்புமணிக்கு ஆப்படித்த திமுக டாக்டர்!

தர்மபுரி மக்களவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் பின்தங்கியுள்ளார்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இதில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் வந்துகொண்டு வருகிறது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும்  நட்சத்திர தொகுதியான தர்மபுரி மக்களவை தொகுதியில் காலை முதல் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போதய நிலவரப்படி திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் 19000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுகவின் செந்தில்குமார் 219000 வாக்குகளையும், அன்புமணி ராமதாஸ் 200000 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.இதனால் திமுக கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.