செய்தியாளர் சந்திப்பில் ராமதாசை தலை குனிய வைத்த அன்புமணி! வைரல் வீடியோ!

செய்தியாளர் சந்திப்பின் போது அன்புமணி ராமதாஸ் நடந்து கொண்டவிதம் ராமதாசை தலை குனியச் செய்வதாக இருந்தது.


   ஆண்டு தோறும் பா.ம.க சார்பில் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டனர். 

இதன் பிறகு இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்தார். பா.ம.க கூட்டணி குறித்து செய்தித்தாள்கள், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கிண்டல் செய்யும் வகையில் ராமதாஸ் பேசினார்.

இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை எழுந்தது- இதனை தொடர்ந்து கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ராமதாஸ் பதில் அளிக்க முற்பட்டார். ஆனால் அப்போது அன்புமணி ராமதாஸ் நடந்து கொண்ட விதம் தான் சர்ச்சையானது.

இது போல் செய்தியாளர்கள் உங்கள் வாயை கிளறுவார்கள். நீங்கள் ஏதாவது கூறிவிடுவீர்கள் என்று அன்புமணி தெரிவித்தார். அதற்கு அவர்கள் வாயை கிளறினாலும் நான் எதையும் கூறப்போவதில்லை என்று அன்புமணிக்கு ராமதாஸ் பதில் அளித்தார்.

மேலும் கூட்டணி குறித்து ராமதாசிம் எதுவும் கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களுக்கு அன்புமணி அன்பு கட்டளை விதித்தார். இதனால் அது குறித்து பேச முற்பட்ட ராமதாஸ் வேறு வழியில்லாமல் தலையை குனிந்து கொண்டார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிறது..