32 வயது நடிகருடன் படுக்கை அறையில் இருக்க ஆசைப்படும் 20 வயது நடிகை! அதிர வைக்கும் காரணம்!

ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அனன்யா பாண்டே, பிரபல இளம் நடிகரான வருண் தவான் தான் தன்னுடைய க்ரஷ் என்று கூறியுள்ளார். இது இவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


வளர்ந்து வரும் இளம் நடிகையான அனன்யா பாண்டே,  சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.  பின்பு "எந்த நடிகர் மீது உங்களுக்கு ஈர்ப்பு அதிகம்?" என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி  எழுப்பினார்.

சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த அவர், நடிகர் வருண் தவான் தான் என்னுடைய க்ரஷ் என்று கூறினார்.  பொதுவாகவே எந்த நேர்காணலிலும் தன்னுடைய க்ரஷ் பற்றியே பேசக்கூடியவர் நடிகை அனன்யா. இதற்கு முன் நடிகர் கார்த்திக் ஆர்யன் தான் தன்னுடைய க்ரஷ் என்று அனன்யா கூறினார்.  ஆனால் தற்போது அவரது முடிவை மாற்றிக்கொண்டார்.

"நடிகர் வருணுடன், எனக்கு எந்த மாதிரியான காட்சிகள் நடிக்க சொன்னாலும் நடிக்க நான் தயாராக உள்ளேன்" என்று கூறினார் அனன்யா.  படுக்கை அறை காட்சியாக இருந்தாலும் கூட வருண் தவானுடன் நடிக்க தயார் என்றும் ஏனென்றால் தான் வயது வந்தது முதலே வருண் தவானை சைட் அடித்து வருவதாகவும் கூறி அதிர வைத்தார்.

மேலும் பேசிய அவர், "ஸ்டுடென்ட் ஆப் தி இயர் 2" திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட திகில் சம்பவங்களை பற்றி கூறினார்.  இந்த படத்தில் டைகர் ஷராப் உடன் இணைந்து நடித்தார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அசம்பாவிதத்தில் இருந்து டைகர் ஷராப் காப்பாற்றியதை கூறினார்.

கடந்த மாதம் வேறு ஒரு தொலைக்காட்சியில்  நடைபெற்ற நேர்காணலில் கார்த்திக் ஆர்யன் தான் தன்னுடைய க்ரஷ் என்று கூறினார் அனன்யா.  ஆனால் தற்போது நடிகர் வருண் தவான் தான்  தன்னுடைய க்ரஷ் என்று கூறுகிறார்.  இதனை அறிந்த இவரது ரசிகர்கள் நடிகை அனன்யாவை கண்டபடி கிண்டல் அடித்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் ஒரு சிலர், "மாதா மாதம் ஆண்களின் மீதான உங்களுடைய ஈர்ப்பு மாறிக்கொண்டே இருக்குமா ?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.