பிக்பாஸ் சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி காஜலுடன் நெருக்கமாக இருக்கும் சன் டிவி ஆனந்தக்கண்ணன்..! வெளியானது புகைப்படம்..!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணனும், காஜல் பசுபதி யும் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


பல வருடங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூர் வாழ் தமிழரான அனந்த கண்ணன் முதலில் ரேடியோவில் RJ ஆக இருந்து வந்தார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் VJ ஆக இருந்து வந்தார்.

அச்சமயங்களில் ஆனந்த கண்ணன் நிகழ்ச்சிகளை வித்தியாசமாக தொகுத்து வழங்கியதால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ஆனந்த கண்ணன் அதன் பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவர் சிந்துபாத் , விக்ரமாதித்தன் போன்ற சீரியல்களில் நடித்தும் பிரபலமானார்.

அதன் பின்னர் சரியாக வாய்ப்பு அமையாத காரணத்தினால் திரைத் துறையில் நீண்டகாலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் ஆனந்த கண்ணன் தனது சொந்த ஊரான சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் அவருக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram

#merrychristmas