வீட்டிற்குள் புகுந்த நாகம்! கடித்துக் குதறி எஜமானரை காப்பாற்றிய நாய்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

தஞ்சை மாவட்டம் வெங்கராயனகுடிக்காடு என்ற கிராமத்தில் நாய் ஒன்று தன் உரிமையாளரைக் காப்பாற்ற கொடிய விஷ நாகத்துடன் போராட்டி உயிரைவிட்டது.


வெங்கராயன் குடிக்காட்டைச் சேர்ந்த நடராஜன் இவர் கடந்த 4 ஆண்டுகளாக பப்பி என பெயரிட்டு ஒரு நாயை வளர்த்து வந்தார். பப்பியை அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பாசத்துடன் பழகி வந்தனர். 

நடராஜன் தனது காலை நேரங்களில் தனது வயலில் வாக்கிக் செல்வது வழக்கம். அப்போது அவருடன் பப்பியும் உடன் செல்லும். கடந்த சனிக்கிழமை அவர் வாக்கிங் சென்ற போது ஒரு இடத்தில் கொடிய விஷநாகம் ஒன்று சீறிக்கொண்டு வந்தது. அதைக் கண்டு அவர் பின் வாங்கிய நிலையில் நடராஜனை காப்பாற்றும் உத்வேகத்துடன் குறைத்துக்கொண்டே நாகத்தின் மீது பப்பி பாய்ந்து சண்டையிட்டது. 

அப்போது நாகத்தால் உடலின் பல்வேறு இடங்களில் கடிக்கப்பட்ட பப்பி விஷம் பாய்ந்து உயிரிழந்தது. வீட்டில் ஒருவரை இழந்ததைப் போன்ற சோகத்துடன் இருப்பதாக நடராஜன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.