பிரியாணி வாங்கி தரமாட்டீங்களா? பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட மனைவி! அதிர்ச்சியில் உறைந்த கணவன்! ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்!

பிரியாணி வாங்கி வரமால் குஸ்கா வாங்கி வந்ததால் கோபம் அடைந்த மனைவி பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து கொண்டு போய் தன் மீது ஊற்றி எரித்து கொண்ட பெண் உயிரிழிந்த சம்பவம் மகாபலிபுரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாபலிபுரம் அருகே அமைந்துள்ள பூஞ்சேரி பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதினர் தான் மனோகரன் மற்றும் சவுமியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார். அப்போது, அவரது வீட்டு ஹவுஸ் ஓனர், ஒரு பிரியாணி வாங்கி வருமாறுசொல்லி பணம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, சவுமியாவும், தனக்கும் ஒரு பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை என்றும் பின்னர் வாங்கி தருவதாக சமாதானம் செய்துள்ளார். ஆனால் வரும் போது ஒரு குஸ்கா வாங்கி வந்துள்ளார். 

குஸ்காவை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டார் சவுமியா. இதுதான் சற்று நேரத்தில் சண்டையாக மாறியுள்ளது. பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஆகி பெரும் தகராறு ஏற்பட்டு வீட்டிற்குள் பூகம்பமே வெடித்தது. கடைசியில் ஆத்திரமடைந்த சவுமியா, மனோகரனின் பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து கொண்டு, மொட்டை மாடிக்கு எடுத்து சென்று உடம்பில் ஊற்றி தீயையும் வைத்து கொண்டார். 

பின்னர் , உடம்பெல்லாம் பற்றிய எரிய அலறி துடித்தார் சவுமியா. இதை பார்த்து கதறிய மனோகரன், சவுமியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தார். ஆனால் 80 சதவீதம் உடம்பில் தீ பிடித்துவிட்டது. இதனால் அந்த பெண் இறந்துவிட்டார். 

இதனையடுத்து தகவலறிந்து காவல்துறையினர் விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், "எப்படியாவது அவர் என்னை காப்பாத்திடுவார்னு நினைச்சுதான் பெட்ரோலை ஊத்திக்கிட்டேன், அவசரப்பட்டுட்டேனே" என்று கதறி அழுதபடி வாக்குமூலம் கொடுத்துள்ளார் சவும்யா. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.