சந்திராஷ்டமத்தால் எந்த ராசிக்காரருக்கு அதிக நன்மை கிடைக்கிறது? ராசி பலன்கள் உள்ளே!

ஒவ்வொருவரும் சந்திராஷ்டம நாட்களை நினைத்து மிகவும் பயப்படுகின்றனர்


அப்படிப்பட்ட சந்திராஷ்டம நாட்களில் அதிக மன உளைச்சல், பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் சந்திராஷ்டம நாட்களில் சில நன்மைகளையும் கொடுக்கிறது. சந்திராஷ்டம நாள் எந்த இராசிக்கு எப்படி அமையும் என்று பார்ப்போம். 

மேஷம் : சந்திரன் எட்டில் நீச்சம் பெற்ற நிலையில் இருந்தால், மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்து வரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபம்தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும். 

ரிஷபம் : பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான லாபம் நிச்சயம் கிடைக்கும். 

மிதுனம் : பொதுவாக அதிக சிரமத்தினை சந்தித்தாலும், அடுத்தவர்களுக்கு உதவி செய்து புகழ் பெறுவர். 

கடகம் : வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். 

சிம்மம் : சந்திராஷ்டமத்தால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12-ம் இடத்திற்குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்கள், பொருளிழப்பும் தவிர்க்கப்படும். 

கன்னி : லாப, நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும். 

துலாம் : துலாம் ராசியை பொறுத்தவரை சந்திராஷ்டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்ற வகையில் மிகுந்த நன்மை காண்பர். வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும். 

விருச்சிகம் : வீண் பழிகளால் உண்டாகும் மன உளைச்சலையும் தாண்டி போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களைப் புரிந்து கொள்வார்கள். 

தனுசு : செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத்தொழிலில் தனலாபம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். 

மகரம் : வாழ்க்கைத்துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத்தொழிலில் நன்மை தரும். 

கும்பம் : சந்திராஷ்டமத்தால் அதிக நன்மை அடைபவர்கள் இவர்களே. ஆறாம் இடத்திற்குரியவர் எட்டில் அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழப்பார்கள். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். 

மீனம் : பிள்ளைகளின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். கடன்சுமை குறையும், தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும்.  சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.