டெல்லி வன்முறை குறித்து மௌனத்தைக் கலைத்து மனம் திறந்த அமித்ஷா..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 42 பேர் உயிரிழந்ததை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் முறையாக தன்னுடைய மௌனத்தை கலைத்து கருத்து தெரிவித்திருக்கிறார்.


குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பலத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளது . இதில் வட கிழக்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது . அதிலும் முக்கியமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வண்ணம் உள்ளது.

இந்த போராட்டத்தில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .மேலும் இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டம் நாடெங்கிலும் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உயிரிழந்ததை அடுத்து அனைவரின் கவனமும் போராட்டத்தின் மீது திரும்பியுள்ளது. இந்நிலையில் எதிர் கட்சியினர் பலரும் போராட்டத்தை அடுத்து அமைச்சர் பதவி விலக வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். இதனையடுத்து போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன் முறையாக தன்னுடைய நீண்ட மௌனத்தை கலைத்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அமைச்சர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை நிலை பற்றிய பொய்யான வதந்திகளை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். மேலும் பொது மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபடவும் வைக்கின்றனர் என அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த சட்டத்தினால் நம் நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று அவர் கூறியிருக்கிறார்.