அமித்ஷா கையில் என்.ஐ.ஏ. என்ற ஆயுதம்? இதைவிட பயங்கர சட்டம் இருந்தாலும் இதுக்கு ஏன் பயப்படுறாங்க தெரியுமா?

என்.ஐ.ஏ வைவிட பயங்கர, சட்டமெல்லாம் இருக்கையில் இதற்கேன் இத்தனை பரபரப்பு.


அதிகார ஆசையில் காங்கிரஸ் எந்த வகையிலும் பிஜேபிக்கு குறைந்ததில்லை.அவர்கள் கொண்டுவந்த என்.ஐ.ஏ என்கிற நேஷனல் செக்யூரிட்டி ஆக்ட்டில் கைது செய்யப்பட்டால் ஓராண்டு சிறை வாசம் உறுதி. ஜாமீன் கிடையாது. ஆனால என்.ஐ.ஏ வில் கைதானால் உடனே ஜாமீனில் வந்துவிடலாம், இருந்தும் ஏன் இத்தனை அபாயக்குரல்கள் என்றால் அந்த ஆயுதம் இருப்பது அமீத்ஷாவின் கையில் என்பதால்த்தான்.அவருடைய ட்ராக் ரெக்கார்ட் அப்படி.

அப்படியே ஒரு பத்து வருஷம் பின்னாடி போங்க,

2010 ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி!

டெல்லி உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஜஸ்டிஸ் ஆலம், ஜஸ்டிஸ்  லோத்தா அமர்வு. குற்றவாளி கூண்டில் இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மிஸ்டர் அமித்ஷா இனி நீங்கள் குஜராத்துக்குள் நுழையக் கூடாது. நீங்கள் கலவரம் ஏற்படுத்துகிறீர்கள் என்று உத்தரவிடுகிறது நீதிமன்றம். அமித்ஷா, தலைகுனிந்து நிற்கிறார். குஜராத்தை விட்டு வெளியேறா விட்டால் கைது செய்து சிறையிலடைப்போம் என்கிறது !

அமித்ஷாவின் வக்கீல் உபேந்தர் யாதவ், அமித்ஷா, குஜராத்தை விட்டு வெளியேறி விடுவார். கைது ஆனை பிறப்பித்து விடாதீர்கள் என்று வேண்டுதல் வைத்து அமித்ஷாவை காப்பாற்றுகிறார்.

இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட அமித்ஷா கையில் இன்று என்.ஐ.ஏ என்கிற புதிய ஆயுதத்தை தரப்போகிறார்கள்.

அதுவும், Section 66F of the information technology act ,NIA வின் கைக்குள் போயிருப்பது சோஷியல் மீடியாவையும்,ஜனநாயக உரிமைகளையும் கேள்விக்குள்ளாக்கி விட்டது.

அதோடு, இந்திய தண்டனைச்சட்டம் 370ஏ,489ஏ,ஆயுதச்சட்டம் செக்‌ஷன் 25 ஆகியவையும் என்.ஐ.ஏ வின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதான் இவளவு அதிவலைகளுக்கு காரணம்.

இதே என்.ஐ.ஏ சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாகூர் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆகி அவையில் அமர்ந்திருக்கிறார். மகாராட்டிர அரசின் MCOCA சட்டத்தில் இருந்து மட்டுமே கோர்ட் நடவடிக்கைகள் தேவை இல்லை என்று என்.ஐ.ஏ சொல்லியிருக்கிறது. ஆனால் , இந்தி தண்டனைச்சட்ட பிரிவுகள், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடர்ந்து நடவடிக்கை இருக்கும்  என்றுதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது இந்திய ஜனநாயக மரபை சீர்குலைத்து விடும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் ஒட்டு மொத்த அச்சம்.