திடீரென மோசமான வானிலை..! ஹெலிகாப்டருக்குள் அமித் ஷா..! அவசரமாக தரையிறக்கம்..! திக்திக் நிமிடங்கள்!

மோசமான வானிலையினால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் 21-ஆம் தேதியன்று மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய கட்சியின் தலைவர்கள் 2 மாநிலங்களிலும் முகாமிட்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவரும், இந்திய நாட்டின் உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று மராட்டிய மாநிலத்திலுள்ள அகமத்நகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தனி ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருந்தார்.

நாசிக் பகுதியில் உள்ள ஒசார் விமான நிலையத்திற்கு மதியம் 2:30 மணியளவிற்கு வருகை தந்தார். அச்சமயத்தில் வானிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து ஹெலிகாப்டரின் ஓட்டுநர் அவசர அவசரமாக விமான நிலையத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். சுமார் 45 நிமிடங்கள் கழித்தே ஒசார் விமான நிலையத்திலிருந்து அமித்ஷாவின் ஹெலிகாப்டர்  அகமதுநகருக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது நாசிக் விமான நிலையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.