குடியுரிமை சட்டத் திருத்தம்! ஒரு இன்ச் கூட பின்வாங்கப் போவதில்லை! அமித் ஷா திட்டவட்டம்!

குடியுரிமை சட்ட திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து கொஞ்சம் கூட பின்வாங்கப் போவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.


ஜோத்பூரில் நடந்த பேரணியில் பங்கு பெற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்டத்தை பற்றி காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜி பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எந்த அளவு பொய் பிரச்சாரங்களை பரப்பினாலும் மக்களிடையே உண்மையை எடுத்துக் கூற பாஜக அரசு தயாராக உள்ளது எனவும் அவர் கூறினார். 

ஆகையால் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த அதில் இருந்து ஒரு இன்ச் அளவு கூட பின்வாங்கப் போவதில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தைரியமிருந்தால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி விவாதிக்க என்னுடன் வாருங்கள் எனவும் அவர் கூறினார்.

பாஜக தலைவர்கள் நாளை முதல் மக்களை நேரடியாக சந்தித்து வீடு வீடாக குடியுரிமையை சட்டம் தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.