பொங்கலுக்கு வருகிறார் அமித்ஷா... அ.தி.மு.க. கூட்டணி முடிவுக்கு வருகிறது..!

தமிழக தேர்தலை முன்னிட்டு வரும் ஜனவரி 14ம் தேதி அமித்ஷா மீண்டும் சென்னைக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த முறை அமித்ஷா வந்த நேரத்திலேயே, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் வருகை நிகழ வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டதால், அப்போதே அறிவிப்பு வெளியிடப்படவில்லை

 இதையடுத்து மீண்டும் 14ம் தேதி சென்னைக்கு வருகிறார் அமித்ஷா. தமிழக பா.ஜ.க. சார்பில் நடத்தப்படும் பொங்கல் விழாவில் பங்கேற்பதுடன், துக்ளக் ஆண்டு விழாவிலும் பங்கேற்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால், கூட்டணியை முடிவு செய்து முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தொகுதி எதிர்பார்த்த பா.ஜ.க. இப்போது ஒட்டுமொத்தமாக 30 தொகுதி வரையிலும் கேட்கிறார்களாம்.

இறுதிக்கட்டத்தில் 25 தொகுதியில் பேச்சுவார்த்தை நடந்துமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.