குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வீடுவீடாக பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷா!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக மக்களிடையே நேரடியாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டார்.


மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான போராட்டங்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வெடித்து வருகின்றன. 

இது தொடர்பாக சமீபத்தில் கூட்டமொன்றில் பேசிய இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி பொய் பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் சில காட்சிகள் செய்து வருகின்றன. இதனால் பாஜக நாடு முழுவதும் உள்ள மக்களிடையே வீடு வீடாக சென்று குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு விளக்க உள்ளோம் என்று அமித் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா காசியாபாத்தில் உள்ள வைஷாலியின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக மக்களிடையே வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.