அமாவாசை நாளில் முழு நிலா! தாம்பரம் சேலையூர் ஆன்மிக அதிசயம்!

தை அமாவாசை 24-1-20 மாலை 5:30 முதல் இரவு 8-30 மணி வரை 'தாம்பரம் சேலையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் திருக்கோயிலில் அபிராமி பட்டர் ,அபிராமி அந்தாதி விழா நடைபெறும்.


தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் இந்த .ஆலயம் உள்ளது. அபிராமி என்றாலே, சட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வரும் ஊர் திருக்கடவூர். ஆனால் சென்னையிலும் காஞ்சி மஹா பெரியவா அருளால் அபிராமி அருள்கிறாள் .1970-ல் காஞ்சி மகா பெரியவர் சென்னை விஜயம் செய்தபோது, இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்ததுதான் இந்த அன்னையின் திருக்கோயில்.

இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. மண்மேடை அகற்றும்போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர் நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது.வரும்

தை அமாவாசை நாளில் திருக்கடவூர் சென்று அன்னையைத் தரிசிக்க இயலாதவர்கள்,சேலையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் திருக்கோயில் வந்து அன்றைய நாள் மாலை இங்கு நடைபெறும் அபிராமி அந்தாதி பாராயணம் கலந்து கொண்டு ,இங்கு நடை பெரும் முழுநிலா தரிசனம் பெறலாம். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இந்த புஷ்பாஞ்சலியில் உதாரணத்துக்கு 300 பேர் பங்குபெறுகிறார்கள் எனில், ஒரு பாடலுக்கு 3 கூடை புஷ்பங்களை அம்பாளுக்குச் சமர்ப்பிப்பார்கள். இவ்விதம் புஷ்பாஞ்சலியுடன் நடைபெறும் அபிராமி அந்தாதி பாராயணம் முடிய இரவு 9 மணியாகிவிடும். அபிராமி அந்தாதி பாராயண நிறைவில் அம்மனுக்கு 9 வகையான பிரசாதங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

2001-ல் தை அமாவாசை வழிபாடு நடந்த போது அம்மனே நடத்திய திருவிளையாடல் ஒன்று மறக்க முடியாதது. 78-வது பாடல் பாடும்போது கரெண்ட் போய்விட்டது. 79-வது பாடல் ஆரம்பித்தபோது கரெண்ட் வந்தது. அதாவது, அபிராமி பட்டர் ‘விழிக்கே அருளுண்டு’ என 79-வது பாடல் பாடியபோது தன் தாடங்கத்தைக் கழற்றியெறிந்து நிலவொளி வீச வைத்தாளல்லவா! அதுபோன்று 79-வது பாடலின்போது நிலவொளியை நினைவூட்டும்விதமான அன்னை செய்த திருவிளையாடல்.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 78-வது பாடல் வரும்போது ,இங்கு கரெண்டை ஆஃப் செய்து, 79-வது பாடலின் போது கரெண்டைப் போடும் முறையைக் கையாண்டு வருகிறார்கள் ,அதாவது அமாவாசையில் முழுநிலா .இங்க இருக்கற அபிராமி அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்துவைத்து நமக்கு அருள்வதுபோல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். இது மட்டுமில்லாம, அம்பாளின் பீடத்திலிருந்து எப்போதும் நீர்க்கசிவு இருக்கும்.