கணவனை கொலை செய்த தந்தை சடலமாக கிடந்த பரிதாபம்..! தற்கொலையா? என்பதில் சந்தேகம்! அம்ருதா பகீர் பேட்டி!

மருமகனை ஆணவக் கொலை செய்த நபர் தற்கொலை: மகள் சந்தேகம்...


ஐதராபாத்: மருமகனை ஆணவக் கொலை செய்த நபர் திடீரென தற்கொலை செய்துகொண்டதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண், வேறு சமூகத்தைச் சேர்ந்த பிரணய் குமார் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு, அம்ருதாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரது தந்தை மாருதி ராவ் ஒரு தொழிலதிபர் என்பதால், தனது பண பலத்தை பயன்படுத்தி, கூலிப்படையை ஏவிவிட்டு, மருமகன் என்றும் பாராமல் வெட்டிக் கொல்லச் செய்தார். இதன்படி, 2018ம் ஆண்டு அம்ருதா கர்ப்பமாக இருந்தபோது, அவரது கணவர் பிரணய் குமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இதுபற்றி வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்தபோது, கூலிப்படையினருக்கு, மாருதி ராவ் ரூ.1 கோடி பணம் கொடுத்ததாக, தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், திடீரென மாருதி ராவ் அவரது பண்ணை வீட்டில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கொலையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தனது தந்தையின் திடீர் மரணம் பற்றி சந்தேகம் எழுப்பியுள்ள அம்ருதா, ''எனது கணவரை கொன்றபின், தந்தையிடம் நான் பேசுவதில்லை. அதனால், அவர் என்ன மனநிலையில் இருந்தார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் அவரது திடீர் மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.