வேற்றுகிரக வாசிகள் வந்து செல்லும் சின்ன ஏரியா! தனியாக செல்லும் மனிதர்கள் சுட்டுக் கொல்லப்படும் மர்மம்!

அமெரிக்காவின் அதிபயங்கர பாதுகாப்பு பகுதியான "ஏரியா 51" ஏலியன்கள் வாழுமிடமென வெளியான தகவல் அனைவரையும் பதற வைத்துள்ளது.


உலகில் பல கண்டறியப்படாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. சில வருடங்களுக்குப் பின்னால் உள்ள மர்மங்கள் இன்று வரை வெளிச்சத்திற்கு வந்ததில்லை. நம் காலத்து மக்களுக்கு கூற வேண்டுமென்றால் ராமர் பாலம், பெர்முடா ட்ரையாங்கிள் ஆகியன மர்ம இடங்களாகவே கருதப்படுகின்றன. 

சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் அதிகளவில் "ஏரியா 51" என்னுமிடத்தை பற்றி அந்நாட்டு மக்கள் தகவல் தேடியுள்ளனர். 

அவ்வாறு தேடிய போது அந்த இடமானது, அதிகம் பாதுகாக்கப்பட்ட இடமென்று தெரியவந்தது. பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளால் இந்த இடம் காக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க நாட்டின் ராணுவ தளத்தில் ஒன்றாக இந்த பகுதி கருதப்படுகிறது. இந்த மனித வாழ்வில் எத்தகைய சிபாரிசுகளை பெற்றிருந்தாலும் இந்தப் பகுதியில் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியே மீறி சென்றால் அவர்களை சுட்டுத்தள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் " ஸ்டார்ம் ஆஃப் ஏரியா 51" என்ற முகநூல் பக்கம் இப்பகுதியை ஆய்வு செய்வதற்காகவே தொடங்கப்பட்டது. எப்பாடுபட்டாவது இந்தப்பகுதியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று  இந்த முகநூல் பக்கத்தின் முக்கிய குழு தீர்மானித்துள்ளது. அவ்வழியே வரும் 20-ஆம் தேதி அன்று லட்சக்கணக்கான மக்கள் இப்பகுதிக்கு திரண்டு செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இக்குழுவை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் ஏலியன்களின் நடமாட்டம் இருப்பதாக கருதுகின்றனர்.

உளவுத்துறையின் மூலம் தகவலை அறிந்த அமெரிக்கா அரசானது அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சம்பவமானது அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவில் பெரிய பலத்தை ஏற்படுத்தும் என்று கூறினால் அது மிகையாகாது.