பெண்கள் ஆண்களுடன் டேட்டிங் செல்வது ஓசி சாப்பாட்டுக்கு தானாம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

நான்கில் ஒரு பெண் சாப்பிடுவதற்காகவே டேட்டிங் செல்வதாக அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.


அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அசூஸா பசிபிக் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகமானது சமீபத்தில் பொதுமக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. 820 நபர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தனர். 

அதன் விடையாக பல்வேறு வியக்க வைக்கும் பதில்களை பல்கலைக்கழகத்தினர் பெற்றுள்ளனர். பொதுமக்களிடம் உணவு,பாரம்பரியம்,தாம்பத்தியம் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை பற்றி பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் அளித்த பதில்களிலிருந்து புதிய மனப்பான்மையை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது 23 சதவீதம் வரை பெண்கள் இலவச உணவிற்காகவே டேட்டிங்க்கு செல்வதாக கூறியுள்ளனர். இந்த பழக்கத்தினை அவர்கள் "foodie call" (ஃபூடி கால்) என்றழைக்கின்றனர்.

இது மட்டுமின்றி பெண்களுள் நிறைய பேர் ஒரு நாள் கூத்து, பொய்யாத உச்சி முகர்வது, அந்தரங்க புகைப்படங்களை பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதேபோன்ற கேள்விகளை வேறு சில பெண்களிடம் முன்வைத்தனர். அவர்களில் 33 சதவீதம் வரை பெண்கள் ஃபுடி கால் முறையை தேர்வு செய்துள்ளனர். இத்தகைய விடைகளை கண்ட பல்கலைக்கழகத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இலவசமாக சாப்பிடுவதற்காகவே பெண்கள் டேட்டிங் செல்வது வலைதளங்களில் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.