கணவரின் அந்தரங்க பெண்கள் அனைவரையும் கற்பழிக்க உத்தரவிட்ட பெண் பிரதமர்..! ஒரு நாட்டையே உலுக்கி வரும் சம்பவங்கள்!

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதிகள் மீது புகாரளித்து வரும் சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது. இதுவரை இங்கு 1,39,230 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 2,632 பேர் நோய் தொற்றால் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் சிந்தியா ரிச்சி. 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வசித்து வருகிறார். பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) சமூக ஊடகப்பிரிவில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ இந்த கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பிறகு அவருடைய கணவரான ஆசிப் அலி சர்தாரி கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

சர்தாரி மீது தான் சிந்தியா ரிச்சி தற்போது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டு வருகிறார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஆசிப் அலி சர்தாரி உடலுறவு கொள்ளும் பெண்களை, மனைவி பெனாசிர் பூட்டோ பாலியல் பலாத்காரம் செய்துவிடுமாறு உத்தரவிடுவார்" என்ற பதிவானது தற்போது அந்நாட்டில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

2009-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் குடிபெயர்ந்த இவர், முன்னாள் பிரதமர் கிலானி மற்றும் அமைச்சரவையில் இருந்த ரஹ்மான் மாலிக் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவில் இணைந்துள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமாபாத் நகரில் வசித்து வரும் இவர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மீது தற்போது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்து வருகிறார்.

குறிப்பாக ரஹ்மான் மாலிக் 2011-ஆம் ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், முன்னாள் பிரதமர் கிலானி அவருடைய அறையில் வைத்து தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரம் குறித்து பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி விசாரணை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னணி தலைவர்கள் சிந்தியா ரிச்சியின் குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டித்துள்ளனர். அவர் மீது அவதூறுகளை பரப்புவதாக ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் எனது பாகிஸ்தான் நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.