கோழி முட்டையில் இருந்து கொரோனாவுக்கு தடுப்பூசி..! தீவிர முயற்சியில் விஞ்ஞானிகள்! ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக கோழி முட்டையிலிருந்து தடுப்பூசி தயாரிக்கும் முயன்ற அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 8,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு எதிராக கோழி முட்டையிலிருந்து தடுப்பூசியை தயாரிக்க அமெரிக்க விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பாரம்பரிய கோழி முட்டை தடுப்பூசிகளை அதிகம் தயாரித்தது அமெரிக்கா. 

அதாவது குறிப்பிடப்பட்ட வைரஸை கோழி முட்டை என்று அமெரிக்க விஞ்ஞானிகள் செலுத்துவர். அந்த வைரஸ் மனிதர்களின் உடலில் சென்றபின்னர் இனப்பெருக்கம் செய்வது போன்று, கோழி முட்டையினுள் சென்ற பின்னரும் இனப்பெருக்கம் செய்து கொள்ளும். அதன் பின்னர் அந்த வைரஸின் நச்சுத்தன்மையை வெளியே எடுத்து மருத்துவர்கள் தடுப்பூசியை தயாரிப்பர்.

இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்திய பிறகு எவ்வாறு அந்த வைரஸுக்கு எதிராக போராட வேண்டும் என்பது நம் உடலின் எதிர்ப்பு சக்திக்கு தெரியவருகிறது. இதனால் மீண்டும் இந்த வைரஸ் பிற்காலத்தில் உடலுக்குள் நுழையும்போது எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்கிறது.

ஆனால் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. வழக்கம்போல கொரோனா வைரஸை முட்டைக்குள் செலுத்தினர். ஆனால் சில வைரஸ்களை போன்று இந்த வைரஸ் தன்னை முட்டைக்குள் இனப்பெருக்கம் செய்து கொள்ளவில்லை. இனப்பெருக்கம் செய்து கொண்டால்தான் தடுப்பூசியை தடுக்க இயலும் அமெரிக்க விஞ்ஞானிகளின் முயற்சி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது அந்நாட்டு மருத்துவ விஞ்ஞானிகளுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.